தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூரில் நெல் கொள்முதல் நிலையத்தை மற்றும் பருத்திப் பிறப்புகளில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்தித்து அவர் தெரிவித்ததாவது;
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின்

பத்திரிக்கை செய்தி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1972 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துவங்கப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, குறுவைப் பருவ நெல் கொள்முதலானது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் துவங்கப்பட்டது. தமிழகத்தில் டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடி பரப்பளவு 6.31 லட்சம் ஏக்கராக அதிகரித்ததின் காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் 3.87 இலட்சம் ஏக்கர் தான் பயிரிடப்பட்டது.
இது பெருமை மிக்கது. மேலும் ஹெக்டருக்கு 6 மெ.டன். அளவில் நெல் உற்பத்தியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளது தேதிவரை 1728 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நாளது தேதி வரை (08.10.2025 வரை) 7.02 லட்சம் மெ.டன். நெல் கொள்முதல் செய்யப்பட்டு 97125 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு .1606.65. பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டில், டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் பயிரிடப்பட்டு. இதே தேதியில் தமிழ்நாட்டில் 979 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள
திறக்கப்பட்டு 310 லட்சம் மெடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44,913 விவசாயிகளுக்கு ரூபாய் 755 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 52.212 விவசாயிகளிடம் 3.92 லட்சம் மெ.டன் கூடுதல் கொள்முதல் செய்யப்பட்டு, கூடுதலாக 851.65 கோடி விவசாயிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல்லினைச் சேமிப்பதற்கும். அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கும் தேவையான சேமிப்பு கிடங்குகள் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பதவியேற்பதற்கு முன் 8.64 லட்சம் மெ.டன். கொள்ளளவுக் கொண்ட 248 செயல்முறைக் கிடங்குகளும், 4.75 லட்சம் மெ.டன். கொள்ளளவு கொண்ட 48 சேமிப்புக் கிடங்குகளும் மொத்தம் 13.39 லட்சம் மெ.டன். கொள்ளளவு கொண்ட 296 கிடங்குகள் மட்டுமே இருந்தன.
ஏப்ரல் 2021 முதல் 2024-2025 வரை கூடுதலாக 38.500 மெ.டன் கொள்ளவு கொண்ட 16 சேமிப்புக் கிடங்குகளும், மேலும் 4.03 லட்சம் மெ.டன். கொள்ளளவு கொண்ட 26 மேற்கூரையிட்ட நவீன நெல் சேமிப்புத் தளங்களும் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 4.41 இலட்சங்கள் மெ.டன் கொள்ளவு உள்ள சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது 2025-2026 ஆம் ஆண்டிற்கு 3.02 லட்சம் மெ.டன். கொள்ளவு கொண்ட 28 மேற்கூரையிட்ட நெல்சேமிப்புத் தளங்களும், 38 இடங்களில் 62.750 மெ.டன் கொள்ளளவு கொண்ட செயல்முறைக் கிடங்குகளும் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அக்டோபர் 2 ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி நெல் கொள்முதல் சேமிப்பு அரவை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைளையும் எடுத்திட ஆணையிடப்பட்டது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை உடனுக்குடன் நகர்வு செய்ய நாளொன்றிற்கு 12 க்கும் மேற்பட்ட சரக்கு இரயில்கள் மூலமாகவும். 4000க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாகவும் பிறமாவட்டங்களுக்கு நெல் நகர்வு செய்யப்பட்டு அரவை முகவர்களுக்கு அரவைக்கு நெல் வழங்கப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டங்களிலிருந்து தினசரி 35000 மெ.டன்.
கிடங்குகளுக்கும் நெல் வெளி மாவட்டங்களுக்கும் ‘சேமிப்பதற்காக நகர்வு செய்யப்படுகிறது.
மேலும் நடப்பு ஆண்டில் அதிகப்படியான நெல் வரத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3.34 லட்சம் மெ.டன். கொள்ளளவு கொண்ட 25 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு 69.883 மெடன். சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைவது குறைக்கப்பட்டுள்ளது..4
நெல் கொள்முதலுக்குத் தேவையான 2.65 கோடி சாக்குகள், εσσαπιού 1071 βιού, LDBP Cover 33101 от 0 0 . LDBP Sheet 34223 எண்ணங்களும் கையிருப்பில் உள்ளன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினைத் தூற்றி 40 கிலோ கொண்ட கோணிகளில் பிடித்து அட்டி போடுவதற்கும். வாரிகளில் ஏற்றுவதற்கும் கூலியாக ரூ.3.25 இருந்ததை இந்த வழங்கப்பட்டுள்ளது. அரசால் ரூ.10 ஆக உயர்த்தி
அலுவலகத்திலிருந்து 5 பொது மேலும் தலைமை மேலாளர்கள், 4 மேலாளர்கள் தலைமையில் 9 குழுக்களும். 12 மண்டல மேலாளர்கள் தலைமையில் 12 குழுக்களும் அமைத்து டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் இயக்கப் பணிகளை துரிதப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முறையாகப் பாதுகாத்திடவும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கிடங்குகளுக்கு நகர்வதை துரிதப்படுத்தியும் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் யாதொரு அச்சமுமின்றி நெல் மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அவர் கூறுகையில் டெல்டா மாவட்டங்களில் திருச்சி மற்றும் சென்னை ரயில்வே துறை அதிகாரிகளிடம் தஞ்சாவூர் திருவாரூர் உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதலாக 12 ரயில்வே தடங்கள் பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.




