• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!

ByT.Vasanthkumar

May 1, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க‌.சார்பில், கோடைக்கால தண்ணீர் பந்தல், செட்டிக்குளம் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்தது. ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில்,
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, நீர்,மோர், பானகம், தர்பூசணி, இளநீர்,வெள்ளரிக்காய் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால்,
மாவட்ட மீனவரனி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ்,
மாவட்ட பிரதிநிதி சந்திரமோகன், செட்டிக்குளம் கிளைச் செயலாளர்கள் மாணிக்கம்,முத்துசாமி, நாட்டார்மங்கலம் நேரு, ராமராஜ், ரமேஷ், சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.