உலக அளவில் இந்திய வணிக சந்தை பெரும் கவனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில்,வணிகத்தில் ஆன்லைன்,போன்ற புதிய தொழில் நுட்பங்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன..

இந்நிலையில் கோவையில் அனைத்து துறை சார்ந்த தொழில் துறையினர் பயனடையும் வகையில் புதிய பெப்பகோரா நிறுவனம் புதிய தளத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்…
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது..
இதில் பெப்பகோரா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி முருகேசன், இந்திய தலைவர் ராஜாமணி,மண்டல தலைவர் கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..
வணிக துறையில் சுமார் 25 வருட அனுபவம் கொண்டவரால் இந்த பெப்பகோராவின் புதிய தளம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் இயங்க உள்ளதாக தெரிவித்தனர்..

உலக அளவில் பெரும் வணிக சந்தையை கொண்டுள்ள இந்தியாவில் பல்வேறு ஆன்லைன் விற்பனை தளங்கள் செயல்பட்டு வந்தாலும் அதில் நம்பகத்தன்மை,பொருட்களின் தரம் போன்ற செயல்பாட்டில் வாங்குமவர்கள்,விற்பவர்கள் இருவரும் பாதிக்கப்படுவதாவும்,எனவே இதற்கு புதிய தீர்வு காணும் வகையில் பெப்பகோரா புதிய தளத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தனர்..
கோவையில் இருந்து செயல்பட உள்ள பெப்பகோரா சிறு குறு தொழில் துறையினருக்கு பெரும் வாய்ப்பாக அமைய உள்ளதாகவும், இந்த தளம் அனைத்து வகையான பொருட்களுக்கும் பொதுவான ஒரு மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாக செயல்பட போவதாக தெரிவித்தனர்.