• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

ByKalamegam Viswanathan

Apr 21, 2023

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது .
புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்காக அல்லாஹ் த ஆலாவினால் வழங்க பட்ட மிக பெரிய வெகுமதியாகும். ஓரு அதீஸில் ரமலான் மாதம் எத்தகை சிறப்பு உள்ளது என்று ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள்.
ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளை கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள். என்பதாக முகமது நபி அவர்கள் அருளுகிறார்கள்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் , மன ஊசலாட்டங்களையும், நீக்கி விடும் என ஓரு அதீஸில் அறிவிக்க பட்டுள்ளது.
நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் , பலன்களும் , இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப்பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டும் மென்பதுதான் நோக்கம் அவை அனைத்தும் கொஞ்சம் பசித்திற்கும் பொழுதான் கிடைக்க பெறுகின்றன.
அவற்றில் மிக பெரிய பலனாகிய மனோ இச்சயை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதினால் அடங்கியிருக்கிறது .சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண்டிருக்கிறான் நோன்பினால் மற்றொரு பலன் என்ன வென்றால் ஏழைகள் போல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும்.
இந்த நோக்கம் மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால் இனிப்பு வகைகள் ஆகாரங்கள் ஆகியவற்றை கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில் தான் உண்டாக முடியும் ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சம் நேரம் பசித்திருப்பதின் மூலம் தான் சாத்தியமாகும்.
ஆகவே . இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மார்க்கத்தை கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும் ஜக்காத்தினையும் செய்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.