• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நிழற்குடை அமைக்க மக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 1, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சின்னபூலாம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

இதற்கிடையே கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார் டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி கிளைச் செயலாளர் சின்னபூலாம்பட்டி முனியாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.