• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மக்கள் குறைதீர்க்கும் முகாம் – மேயர்

ByKalamegam Viswanathan

Dec 26, 2024

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமானது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி திருத்தம் தொடர்பாக 20 மனுக்களும், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 1 மனுவும், காலிமனை வரி மற்றும் புதிய வரிவிதிப்பு வேண்டி 3 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு தொடர்பாக 48 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 13 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 1 மனுவும் என மொத்தம் 87 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் நேரடியாக பெறப்பட்டது.

நடைபெற்ற முகாமில், சொத்துவரியில் பெயர் திருத்தம் செய்ய வேண்டி விண்ணப்பித்த மனுதாருக்கு உடனடியாக பெயர் திருத்தம் செய்து அதற்கான ஆணையினை மனுதாரருக்கு மேயர் வழங்கினார்கள். இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன்,
மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் பிரபாகரன், நகர்நல அலுவலர் மரு.இந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் முத்து, உதவிப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.