• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தங்க கட்டிய கொடுத்தாலும் மீண்டும் திமுகவை ஆட்சியில் மக்கள் அமரவிடமாட்டர்கள் – செல்லூர் ராஜூ..,

ByKalamegam Viswanathan

Feb 14, 2026

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிமங்கலம் புதூரில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

புதூர் பகுதியில் 80 வீடுகள் தான் இருக்கு, ஆனால் சாலை, குடிநீர் ஆகிய நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம், கிராம பகுதி வளர்ச்சிக்காக தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கியுள்ளோம், இங்கு ரேசன்கடை இல்லை, நடமாடும் ரேசன்கடையை முடக்கிவிட்டது இந்த அரசு அதனால் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நகரும் ரேசன்கடை திட்டம் வரும் என்றார்.

மகிளர் உரிமைத்தொகை குறித்த கேள்விக்கு?

5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கியது. திமுகவுக்குதான் இன்ப அதிர்ச்சி ; மக்களுக்கு அல்ல;இது வழக்கமான ஒன்று தான்

ஆனால் அரசு பணியாளர்கள் ரொம்ப வேதனையில் உள்ளனர்; தூய்மை பணியாளருக்கு, பகுதி நேர ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் ,செவிலியர் பணி் நிரந்தம் ஆகியோருக்கு காசு இல்ல , கல்விகடன் ரத்துக்கு காசு இல்ல என சொன்னார் முதலமைச்சர் இதுக்கு எப்படி காசு இருக்கிறது.

தேர்தல் பயத்தாலும், அதிமுகவின் 10 தேர்தல் அறிக்கையால் மக்களிடம் வரவேற்பு இருப்பதை பார்த்து முதலமைச்சருக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டது.

எடப்பாடியாரின் 10 தேர்தல் அறி்க்கையால் திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது; திமுக தங்க கட்டி கொடுத்தாலும் மக்கள் ஆதரவு தரமாட்டார்கள். அவ்வளவு கொதிப்பில் உள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை 5 ஆயிரம் குறித்து முதலமைச்சருக்கு யாரோ தவறாக சொல்லிகொடுத்திருக்கிறார்கள்;

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு 7 ஆயிரம் கொடுத்தபோது தோற்றுபோனார், ஜெகன்மோகன் ரெட்டி 5 ஆயிரம் அறிவித்தார் ஆனால் எதிர்கட்சியாக கூடவில்லை

திடிரென இந்த ஆண்டு மட்டும் கோடைகால சிறப்பு நிதி என சொல்வது சிரிப்பு சிரிப்பா இருக்கு மாணவர்களுக்கு தான் கோடைகால சிறப்பு பயிற்சி தருவாங்க , முதலமைச்சர் யாரோ சொல்லியதை கேட்டு செய்றாரு அது காமெடியாக போய்விட்டது.

ஏன் மற்ற ஆண்டுகளில் கோடை இல்லையா வெயில் இல்லையா மக்கள் கஷ்டபடவில்லையா? ஏன் மற்ற ஆண்டுகளில் மக்களுக்கு பொங்கல் பணம்தரவில்லை.

தங்க கட்டியாக கொடுத்தாலும் மீண்டும் திமுகவை ஆட்சியில் மக்கள் அமரவிடமாட்டர்கள் மறந்தும் கூட அமர விடமாட்டார்கள். கோடைகால தொகை என்பது எது மாதிரியும் இல்லாம இது புதுமாதிரியாக இருக்கு.

எங்களால் தான் 5 ஆயிரம் கொடுத்துள்ளார்கள் என விஜய் சொல்லியுள்ளார் என்ற கேள்விக்கு?

விஜய பத்தி பேசுனா அத தான் ப்ரேக்கிங் போடுவங்க அதனால் நாங்க நேருக்கு நேரா திமுகவை பேசிக்கிறோம்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மூலமாக திமுகவின் திட்டத்தை எடப்பாடி அனைத்தையும் காலி பண்ணிட்டாரு

உலகம் சுற்றும் வாலிபன் படத்துல எம்ஜிஆர் போல தான் எடப்பாடி நம்பியாரை துவைத்து எடுக்கிறார்.

இது மக்கள் காசு…திமுக அதை தான் கொடுக்குறாங்க அவங்க கொள்ளை அடித்து வைத்த காசை கொடுக்கலாமே?

ஊராவிட்டு நெய்யே எங்க வீட்டு பிள்ளையே என்பது போல கொடுத்துள்ளனர்.

இது திமுகவின் நாடகம் , அரசு ஊழியர்களோடு நாம் போராட்டம் நடத்துரோம் ஆனால் அதற்கு நிதி இல்லை என சொல்றாரு இதற்கு எப்படி நிதி கிடைத்தது என கூட்டணி கட்சியினரே கேட்பார்கள்

அதிமுகவினர் தலைவர்களின் கொள்கையை மறைந்துவிட்டனர் என பேசியது குறித்த கேள்விக்கு?

விஜய் (கண்டவர்கள்) பேசுவதெற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை, இங்கு கிளைமேக்ஸ் வந்துருச்சு எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் தான் போட்டியே ;; மற்றதெல்லாம் போகும்போதே தட்டிவிட்டு்ட்டு போகனும்

ஆயிரம் பேரு ஆயிரம் சொல்வாங்க அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? என கூறினார்.