• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை புறநகர் பகுதியில் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி

ByKalamegam Viswanathan

Mar 6, 2023

மதுரை புறநகரில் பல கிராமங்களில், அதிகாலை 4 மணி முதல் பனிப்பொழிவு அதிகம் இதனால் பொதுமக்களுக்கு சளி தொந்தரவு ஏற்படுகிறது அதேபோல மல்லிகைபூ உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும், பலருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் மக்கள் அவதியுறுகின்றனர். மதுரை அருகே சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம், ஊத்துக்குளி, தென்கரை, குருவித்துறை, நாராயணபுரம், கருப்பட்டி, அலங்காநல்லூர் ,
அழகர் கோவில், சத்திரப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில், அதிகாலை 4 மணி முதல் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இப்பனிப் பொழிவாள், பொதுமக்களுக்கு சளி தொந்தரவு ஏற்படுகிறது. மேலும், நிலக்கோட்டை, சிலுக்குவார் பட்டி, கொடைரோடு, மாவுத்தன் பட்டி ஆகிய கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால், மல்லிகை பூ விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும், மதுரை நகர் பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் பனிப்புலிவு ஏற்படுகிறது. இப்பனி பொழிவானது, அதிகாலை 8 மணி வரை தொடர்கிறது.
இதனால் ,பொதுமக்கள், வயதானவர்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். பொதுவாக, பனிப்பொழிவானது மாசியுடன் குறையும் என பலர் தெரிவிக்கின்றனர். சித்திரை வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.