• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..,

BySeenu

Sep 4, 2025

ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மலையாள மக்கள் பலரும் பூக்களை வாங்குவதற்கு பூ மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு பலரும் வாங்கி வழிபடும் செவ்வந்தி, மல்லிகை ஆகிய மலர்கள் அதிகமாக விளைச்சல் உள்ளதால் பூக்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இருப்பதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வந்தி பூ கிலோ 200 ரூபாய்க்கும் வெள்ளை செவ்வந்தி 400 ரூபாய்க்கும், வயலட் செவ்வந்தி 200 ரூபாய்க்கும் நாட்டு செவ்வந்தி வகைகள் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மல்லிகைப்பூ கிலோ 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பூக்களின் விலை குறைவுதான் என்றும் பூக்கள் விளைச்சல் செய்யும் இடத்திற்கே பலரும் சென்று வாங்கி கொள்வதாக வியாபாரிகள் கூறினர். கோவையில் இருந்து எர்ணாகுளம் திருச்சூர் ஆகிய இடங்களுக்கு மட்டுமே பூக்கள் அனுப்பி வைக்கப்படுவதாக கூறினர்.

அதேசமயம் பூக்களின் விலை உயர்ந்திருப்பதாகவும் எனவே குறைந்த அளவிலான பூக்களையே வாங்கி செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.