புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஊத்தப்படி என்ற குக்கிராமம் ஆகும். இரண்டு சமூகத்தினர் வசித்து வந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு அந்தப் பகுதியில் ஒரு காலனி ஏற்படுத்தப்பட்டு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்போது அங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசே ஏற்பாடு செய்து இடம் ஒதுக்கி வீடுகளையும் கட்டிக் கொடுத்து குடியேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். அரசு கட்டிக் கொடுத்த அந்த வீடுகளில் தற்போது சிமெண்ட் பூச்சிகள் உடைந்து கொட்டிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் புகார் மனுவில் கேட்டுக்கொண்டபடி 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த நிலையில் அந்த வீடுகளுக்கு உரிய பட்டா கிடைக்கவில்லை. அதில் குடியிருக்கும் நபர்களில் சிலருக்கு அரசு கலைஞர் வீடு உள்ளிட்ட சில வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறது. பலர் ஏற்கனவே கட்டிக் கொடுத்த வீடுகளில் தான் குடியிருந்து வருகிறார்கள்.

அந்த வீடுகளும் பழுதடைந்து உள்ளன. பழைய வீடுகளுக்கும் சரி புதிதாக அரசு உதவி பெற்று கட்டி குடியிருக்கும் வீடுகளுக்குள் இதுவரை அரசு பட்டா வழங்கவில்லை. எனவே ஊத்தப்பட்டி காலனியில் குடியிருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நில உரிமைப் பட்டா வழங்க வேண்டும், பழுதாகி இருக்கும் வீடுகளைப் புதிதாக் கட்டித் தர வேண்டும், அங்கு குடியிருக்கும் அனைவருக்கும் தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் மேல்நிலை நீர் சேர்க்கத் தொட்டியானது பழுதாகி இருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் ஏணி மிகவும் பழுதாகி இருப்பதால் யாரும் மேலே ஏற முடியாது. அதனால் சுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை.
அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு புதிய ஏணி அமைத்து கொடுத்தால்தான் சுகாதாரமான குடிநீரை பெற்று தாங்கள் நோய் நொடி இன்றி வாழ முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லியும் இருக்கிறார்கள்.




