• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுகவை மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள்- அன்புமணி ராமதாஸ்..,

ByK Kaliraj

Sep 29, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துரைசாமிபுரத்தில் பட்டாசு தொழிலில் ஈடுபடும் பட்டாசு தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேசியது

பட்டாசு தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மற்றும் கோரிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக நேரில் பார்க்க வந்துள்ளேன் தொடர்ந்து 100 நாள் நடை பயணமாக பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அதற்கான தீர்வுகளை அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் எதிர் இக்காலத்தில் உதவும் வகையில் பயன்பெறும் திட்டங்களை உருவாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.

பட்டாசு தயாரிப்பு இந்தியாவில் 95 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்யும் சிவகாசியில் பட்டாசு தொழிலில் நேரடியாக மூன்று லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக ஐந்து லட்சம் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசில் சரவெடி பிரதான வெடியாகும். நூறு ஆண்டுகளாக சரவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம். மாசுக்கட்டுப்பாடு ஏற்படுத்துவதாக கூறி சரவெடி தயாரிக்க 2018ல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை தயாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆனால் பசுமை பட்டாசு என எதுவும் தயாரிக்கப்படவில்லை.

அதற்கான வேதிப்பொருளும் இதுவரை தொழிலக பாதுகாப்புத் துறையினர் குறிப்பிடாததால் பட்டாசு தயாரிப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியமிக்க பட்டாசு தொழிலில் பாதுகாக்கப்பட வேண்டும்.

பட்டாசு தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 25 லட்சம் மக்கள் நம்பியுள்ளனர்.

பட்டாசு தொழிலில் கடந்த ஆண்டு விபத்தில் 25 பேர் பலியானார்கள் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக்கு காரணம் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் போது மது போதையில் இருந்தது தான் காரணம்.

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்கள் நடமாட்டம் காரணமாக இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடை செய்ய தமிழக அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் போதைப் பொருட்களை விற்பனை செய்கின்றனர் ஆ
அதனால் அவர்களால் அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்.

தொடர்ந்து திமுகவுக்கு வழங்கி வரும் ஆதரவை தமிழக மக்கள் வரும் தேர்தலில் ஸ்டாலின் தேவையில்லை என திமுகவை மக்கள் முழுமையாக புறக்கணிப்பார்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

எண்ணற்ற நலத்திட்டங்கள் கொண்டு வந்து தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவேன் என கூறினார்.

நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.