• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலாவதியான மருந்தை வழங்கியதாக நோயாளி குற்றச்சாட்டு..!

Byகுமார்

Feb 26, 2022

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த காளமேகம் (45) என்பவர், இன்று காலை மதுரை தத்தநேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சர்க்கரை நோய்க்காக இன்சுலின் மருந்தை வாங்க வந்துள்ளார். அப்போது அவருக்கு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான மருந்து வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவ நிர்வாகம் அவருக்கு பழங்காநத்தம் பகுதியில் உள்ள மற்றொரு இ.எஸ்.ஐ மருந்தகத்தில் புதிய மருந்து வழங்கப்பட்டது. மேலும் கவனக்குறைவாக காலாவதியான மருந்தை மருந்தாக ஊழியர்கள் விநியோகம் செய்திருக்கலாம் எனவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள்ளாக புதிய மருந்துகளை இருப்பு கிடைக்கபெற்ற பிறகு நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் வினியோகிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.