• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

ByA.Tamilselvan

Apr 10, 2023

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக தனி தீர்மானத்தை துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கவர்னருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகள் மூடி, எண்ணி கணிக்கும் குறியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எம்.எல்.ஏக்களின் பகுதி வாரியாக முறைப்படி நடைப்பெற்றுது. வாக்கெடுப்பின் இறுதியில் 144 பேர் கவர்னருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களித்தனர்.

2 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். நடுநிலை யாரும் வகிக்கவில்லை. ஆதலால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதி 6-ல் யாரும் இல்லை. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. சட்டசபை விதிகளில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது