• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் பலத்த காயம்

ByKalamegam Viswanathan

Jan 31, 2025

சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனர் அரசு பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் பகுதி பள்ளிவாசல் அருகே சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் பேருந்து தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து ஓட்டுநர் இயக்கி வந்தார் நாச்சிகுளம் கிராமத்தில் இருந்து மதுரை அண்ணா நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து நிலை தடுமாறி வைகை ஆற்றுக்கரையில் உள்ள 10 அடி பள்ளத்தில் தென்னை மரத்தின் மீது பலமாக மோதியது இதில் அரசு பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் அரசு பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரையும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு பேருந்து தென்னை மரத்தின் மோதியதில் மரம் மின்சார வயிறு மீது விழுந்து அது சாலையில் மின்சார கம்பி விழுந்ததும் அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது சோழவந்தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.