• Thu. Jan 29th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு மரியாதை ..,

ByR. Vijay

Aug 15, 2025

இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுகந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சமாதான புறாக்களை பறக்க விட்டனர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் மாற்று திறனாளிகள் நலத்துறை,தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட 9 துறைகள் சார்பில் 60 பயனாளிகளுக்கு 94 லட்சத்து 37 ஆயிரத்தி 777 ரூபாய் மதிப்பீட்டிலான  நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ருதி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர்..