• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாக்., எல்லை பாதுகாப்பை மேம்படுத்த
நிதி வழங்குகிறது அமெரிக்கா..?

எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுப்பதற்காக தங்களின் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 7 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுப்பதற்காக தங்களின் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இதனை தெரிவித்தார். சமீபத்தில் அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற அவர், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் உள்பட ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுபற்றி கூறிய பிலாவல், 2023-ல் வழங்கப்படும் எல்லை பாதுகாப்பு நிதி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபையின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்களில் 2 மூத்த உறுப்பினர்கள், 2023-ம் ஆண்டுக்கான அமெரிக்க பட்ஜெட்டில் பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர் என்றார்.