• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…

Byகுமார்

Sep 24, 2023

மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.

மதுரை கே.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா மாண்டிச்சேரி பள்ளியில் BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. BSNL பொதுமேலாளர் வேணுகோபால் தலைமையிலும், துணைபொது மேலாளர் பீணாபணிக்கர் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினர்களாக மகாத்மா மாண்டிசேரி பள்ளியின் முதல்வர் ஜெய்ஸ்ரீ மற்றும் நித்யாஅரவிந்த் பயிற்றுநர் JCI இந்தியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஓவிய போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த ஓவிய போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளி கட்டினார். பின்னர் துணைப் பொது மேலாளர் உமா செய்தியாளரிடம் கூறியது. அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாபெரும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இந்த ஓவிய போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.இந்தப் போட்டிக்கு மாணவ, மாணவியர்களை தயார் செய்த பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறினார்.