ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட…
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…
எல்லோரும் எல்லோருக்கும் ஒரே முகத்தை காட்டுவதில்லை.
இன்னோரு முகத்திரையை மாட்டிக் காட்டுகிறார்கள்.
ஒருமுறை மாட்டிக்கொண்டுவிட்டால் சாகும்வரை அந்த முகத்திரையை கழற்றுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே போய்விடும்.
சிலரின் முகத்திரைகள் தானாக கழன்று விடும். அல்லது
காலம் சிலரின் முகத்திரைகளைக் கிழிக்கும்.
வாழ்வது சில காலம் மட்டுமே
எனவே உண்மை முகத்தோடு வாழ்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
அடுத்தவர் பார்வைக்காக முகமூடியை மாட்டிக் கொள்ளாதீர்கள்.
புத்திசாலிகளே இல்லாத ஊர் ஒன்று இருந்தது. அங்கு புதிதாக ஒரு ரயில் நிலையம் துவக்கப்பட்டது.
முதல் நாளே, மிகக் கோரமான விபத்து நடந்துவிட்டது. பத்திரிகைக்காரர்கள் அங்கு விரைந்தனர்.
உயிர் பிழைத்திருந்தது ஒரே ஒரு நபர். அவர் நடுக்கத்துடன் நடந்ததை விவரித்தார்… “எல்லா ஜனமும் ஒழுங்காக பிளாட்பாரத்தில்தான் நின்றிருந்தனர். திடீரென்று, ‘சென்னை செல்லும் ரயில் இன்னும் சற்று நேரத்தில் பிளாட்பாரத்துக்கு வந்து சேரும்’ என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். பிளாட்பாரத்தில் ரயில் ஏறப்போகிறது என்று நினைத்து, அத்தனை பேரும் தண்டவாளத்தில் குதித்து, ரயிலில் மாட்டிக் கொண்டார்கள்!”
“சரி, நீங்கள் மட்டும் எப்படித் தப்பித்தீர்கள்?”
பதில் சோகமாக வந்தது..
“அதை ஏன் கேட்கிறீர்கள்? தற்கொலை செய்துகொள்வதற்காகத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்தேன். அறிவிப்பு வந்ததும், ரயிலில் விழுவதற்காகச் சரேலென்று பிளாட்பாரத்திக்கு தாவினேன்!”
நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க விரும்பினால், நீங்கள் தான் அதைச் செய்ய வேண்டும், நீங்கள் திறமைசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தால்,
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
இனம் என்னவோ ஒன்று தான்…
நிறங்கள் தான் வேறு வேறு…
மனிதர்களும் இவ்வாறு தான்.
பிரதி பலன் பார்க்காத உழைப்பு மென்மேலும்
உயர வைக்கும், தன்னம்பிக்கை
தடுமாற்றங்களை தகர்த்தெறியவைக்கும்.
உழைப்பால் உண்டாகும் உற்சாகம் எல்லையில்லாமகிழ்ச்சியை தரும்,
உழைப்பில் தான் உண்மையான வெற்றி உள்ளது