ஊக்கமூட்டும் பொன்மொழிகள்
1. “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!”
2. “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”
3. “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!”
4. “பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!”
5. “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை.. நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி.!”
6. “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை மறந்து விடுவார்கள்.”
7. “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை மாறலாம்.. அதற்காக உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதே.”
8. “வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் நமக்கான தடத்தில் மட்டுமே நாம் ஓட வேண்டும் எத்தனை போட்டியாளர்களிருந்தாலும் அத்தனை தடங்களுக்கும் ஒரே இலக்கு தடம்மாறாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.!”