விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள திடலில் இராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த புதுப்பாளையம், கடம்பன் குளம் திருக்குரங்காநல்லூர் வடக்குங்கநல்லூர் அலப்பசேரி கருங்குளம் அப்பனேரி உள்பட பல்வேறு பகுதிகளில் விளைந்த நெல் கொள்முதல் செய்வதற்காக புதிய நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் என்ஏ ராமச்சந்திர ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் பி அம்மையப்பன் முன்னிலையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். மேலும் ராஜபாளையம் உதவி வேளாண்மை அலுவலர் சோமசுந்தரம், விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 40 கிலோ எடை கொண்ட 800 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சன்ன ரக நெல் கிலோவிற்கு 24.50, மோட்டா ரக நெல் கிலோவிற்கு 24.05 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 16 சதவீத ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.