குமரி மாவட்டத்தின் அரசியல். தமிழகத்தின் ஏனைய மாவட்ட அரசியலை விட சற்று வித்தியாசமாக பயணிக்கும் மாவட்டம்.
தமிழகத்தில் தேர்ந்த அரசியல் வாதியான கலைஞர் கருணநிதியே, குமரியின் அரசியல் கால நிலையை பார்த்து, பெற்ற அனுபவத்தில் தெரிவித்த கருத்து.

நெல்லையே எமக்கு எல்லை,குமரி எமக்கு என்றுமே தொல்லை…. என்ற அவரது கருத்து, காலம் பல கடந்த போதும் ஒரு பேசு பொருளாக இன்றுவரை வலிமை பெற்று திகழ்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.!!
நாகர்கோவிலில் மக்களவை உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணி யின் மரணத்தை அடுத்து வந்த. 1969_ம் ஆண்டு நாகர்கோவில் மக்களவையின் முதல் இடைத்தேர்தலில். தலைவர் காமராஜர் போட்டியிடுவது முடிவானதும். அகில இந்திய காங்கிரஸ் தலைமை முதல்,குமரி மாவட்டத்தில் உள்ள கிராம காங்கிரஸ் அமைப்பு வரை பெரும் தலைவர் காமராஜர் வெற்றிக்கு வியூகம் வகுத்த போது.
நாகர்கோவிலில் மக்களவை இடைத்தேர்தலில். தலைவர் காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவர் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் அன்று இருந்த சுதந்திரா கட்சியை சேர்ந்த டாக்டர் மத்தியாஸ்.சுயேட்சை வேட்பாளராக “தராசு”சின்னத்தில் பிரதான வேட்பாளராக போட்டியிட்டார்.
தலைவர் காமராஜரை எப்படியும் தோற்கடித்து விட வேண்டும் என்பதில் கருணாநிதி, ஆதித்தனார் இணைந்து திட்டமிட்டனர். குமரி ஒரு அரசியல் போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
காங்கிரஸ், திமுக உரசல் என்பது குமரியில் சற்று அதிகமாகவே இருந்த நிலையில்.
இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ஜாக்கீர்உசேன் மரணம். அடுத்த ஜனாதிபதி யார்.!?
காங்கிரஸ் தலைமை சஞ்சீவிரெட்டியை காங்கிரஸ் வேட்ப்பாளராக அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத இந்திரா காந்தி வி.வி.கிரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் ஒரு புதிய கோசத்தை எழுப்பியது.
“மனசாட்சி படி வாக்களிப்பது”. காங்கிரஸ் இரண்டு கூறுகளாக உடைந்தது. அவை முறையே பழைய காங்கிரஸ், புதிய காங்கிரஸ். பழைய காங்கிரஸ் கட்சி தலைவராக நிஞலிங்கப்பாவும், புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜெகஜீவன்ராமும் இருந்தனர்.
தமிழகத்தில் 1967_ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் அடுத்த சட்டமன்ற தேர்தல் என்பது1972_ல் நடக்க வேண்டும். பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொது தேர்தலை நடத்த முன்வந்த அந்த கால கட்டத்தில் தான்.
புதிய காங்கிரஸ்,திமுக கூட்டணி முதல் முதலாக உருவானது.
தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் ஒரு ஆண்டு இருந்த நிலையில். அன்றைய தமிழக முதல்வர் தமிழக சட்டமன்றத்தை கலைத்ததுடன். நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்திற்கு மான,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்தது டன் மட்டும் அல்ல.
சட்டமன்ற தேர்தலில் புதுகாங்கிரஸ் போட்டியிடாது, அதற்கு பதிலாக தமிழக நாடாளுமன்றத்தில் அதிக இடங்களில் போட்டியிட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை மாற்றாக இந்திரா காந்தி எழுதியதுதான்.
தமிழகத்தில் 1967_க்குபின் காங்கிரஸ் கட்சி தனியாகவோ, கூட்டணியில் ஆட்சியில் அதிகாரம் வகிக்க முடியாத நிலைக்கு இன்று வரை தொடர்வதாக பல்வேறு அரசியல் வல்லுநர்களது கருத்து.
குமரி அரசியலில். காங்கிரஸ், அல்லது திமுக என்றாலும் குமரியில் பெரும் பான்மை சமுகமான நாடார் சமுகமே அதிகாரம் பெற்ற குமரி மாவட்டத்தில். சுரேஷ் ராஜான் ஒரு மாற்று சமுகத்தை சேர்ந்தவராக இருந்தும் மாவட்ட அரசியலில் 20_ஆண்டுகளுக்கு மேல் அதிகார பீடமாக இருந்தார். இதில் (10_ஆண்டுகள் அமைச்சர்) குமரி மாவட்ட திமுக கிழக்கு,மேற்கு என்று இருந்தாலும். சுரேஷ் ராஜான் தான் குமரி மாவட்ட அரசியலில் ஒற்றை மையம் என திகழ்ந்தார். இவரால் திமுகாவிற் அழைத்து வரப்பட்ட பலரில் முக்கியமானவர்கள். மகேஷ், ஆஸ்டின் போன்ற மாற்று கட்சியினர்.
ஒரே கட்சியில் பயணித்தாலும் சில நேரங்களில் ஒரு மன ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்க முடியாது. அத்தகைய ஒரு நிலை தான் நாகர்கோவில் முதல் மேயர் தேர்தலில் சுரேஷ்ராஜனுக்கு ஏற்பட்ட அரசியலில் சருக்கல்.
யானைக்கும் சருக்கம் ஏற்படாது,அப்படி ஏற்பட்டு விட்டால்.!?
எழுவதற்கு சற்று காலம் ஏற்படும் அந்த நிலைதான் குமரி மாவட்டத்தில் சுரேஷ் ராஜனுக்கு ஏற்பட்டது என்றாலும் அவரது ஆதரவாளர்கள் வட்டத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்படவில்லை.
சுரேஷ் ராஜனிடம் முதல்வர் ஸ்டாலின் கொண்டிருக்கும் நட்பு பெரிதா.? முதல்வர் ஸ்டாலினின் துணைவியர் திருமதி.துர்க்காவிற்கும், சுரேஷ் ராஜனின் துணைவியர் திருமதி பாரதிக்கு இருக்கும் நட்பு அதிகமா? என்றொரு “பட்டிமன்ற”தலைப்புக்குறிய விவாதம்.
குமரி திமுகவில் எது எப்படி இருந்தாலும் சுரேஷ் ராஜனுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் பதவி என்பது.குமரி திமுக அரசியலில் சுரேஷ் ராஜான் ஒரு வி.வி .ஐ. பி.,என்பதை காட்டிவிட்டது. வடசேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி இவரது செல்வாக்கிற்கு கட்டியம் கூறும் சாட்சியாக கூடிய கூட்டம்.