• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..,

ByArul Krishnan

May 5, 2025

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இலங்கியனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது இங்கு இலங்கியனூர் அதன் சுற்றுவட்டார பகுதியான தரிசு, பிஞ்சனூர், புதூர், வலசை, நகர், நல்லூர், ஐவதுகுடி ஆகிய கிராமத்தில் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த நெல்லை அறுவடை செய்து இங்கே விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சம்பா நெல்லை இலங்கியனூர் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அக்னி வெயில் தொடங்கிய நிலையில் நேற்று மாலை வேப்பூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் இலங்கியனூர் கிராமத்தில் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்ததில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல்மணிகளை மழை நீர் சூழ்ந்து நாசமாக்கியது. பின்னர் இன்று காலை விவசாயிகள் வந்து பார்த்த பொழுது நெல்மணிகள் மழை நீர் சூழ்ந்து இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தனர்.

பின்னர் அங்கு மோட்டார் வைத்து தேங்கி இருந்த மழை நீரை அகற்றி வருகின்றனர் இந்த மழை நீர் அகற்றினாலும் மழையில் நனைந்த நெல்மணிகளை வேற இடத்தில் கொண்டு சென்று காய வைத்தால் தான் நெல்மணிகள் வீணாகாமல் தடுக்க முடியும். இந்த நெல்மணிகளை சரி செய்ய இரண்டு நாட்களாக ஆகும் என்று விவசாயிகள் வேதனையாக தெரிவித்தனர்.