குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவியினை திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!!

விஜய், அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு புலி பட தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதை திரையுலகினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.






