• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆஸ்காருக்கு தேர்வான “செல்லோ ஷோ” பட சிறுவன் திடீர் மரணம்

ByA.Tamilselvan

Oct 12, 2022

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல் கோலிக்கு பரிசோதனையில் லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார். 15 வயதாகும் ராகுல் கோலி மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் கோலி நடித்துள்ள செல்லோ ஷோ படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் வெளியாகும் முன்பே ராகுல் கோலி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லோ ஷோ படத்தை 14-ந்தேதி தியேட்டரில் பார்த்த பிறகே ராகுலுக்கு இறுதி சடங்கை செய்வோம் என்று அவரது தந்தை கண்ணீரோடு கூறினார்.