• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

BySeenu

Dec 3, 2023

உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, கோவை மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 27 வது ஆண்டாக நடைபெற்ற . நிகழ்ச்சி துவக்க விழாவில் . கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக, கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திருமதி கே. பவானீஸ்வரி, கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் உடல் உறுப்புகள் தானம் அளித்தவர்கள், பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவதுறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர், 16 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த மாரத்தான் கே.எம்.சி.ஹெச் சூலூர் மருத்துவமனையில் துவங்கி அவினாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவுற்றது. முன்னதாக நிகழ்ச்சியில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில், கோவையில் கே.எம்.சி.ஹெச் சார்பாக முதல் மாராத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இது போன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். உடலுறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அது எவ்வாறு விலைமதிப்பற்ற உயிர்களைக் காத்திட உதவுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த வருட மாரத்தான் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மாராத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.