தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், தினமும் காய்ச்சல் முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் ஆயிரம் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை நடத்த அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்கள் நகர் நல அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து மண்டலங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தனியார் ஆய்வகங்கள் காய்ச்சல் விபரங்களை சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.