கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று (மாா்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று முதல் மாா்ச் 16-ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகா், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை(மார்ச் 12) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” என ஆட்சியர் இளம்பகவத் எச்சரிரித்துள்ளார்.
அதே போல் நெல்லை மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.