• Tue. Mar 25th, 2025

நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு- ஓபிஎஸ் தரப்பு முடிவு

ByA.Tamilselvan

Sep 3, 2022

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்.
ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்தானது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ஓ.பன்னீ ர்செல்வம் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். எல் .ஏ. அன்று அளித்த பேட்டியில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டார். இந்நிலையில், வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.