கடவுள் வெங்கடாசலபதி குறித்த பாடலை படத்திலிருந்து நீக்குவதாக பட குழு அறிவித்து இருந்தாலும் youtube இல் இருந்து முழுமையாக அதனை டவுன்லோட் செய்யாதவாறு நீக்கம் செய்ய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திரையரங்கில் வெளியாக உள்ள, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘DD NEXT LEVEL’ படத்தின் ‘கிஸ்ஸா 47’ பாடல், YouTube -ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் ஹிந்து கடவுளான வெங்கடாசலபதி சுவாமியை இழிவுபடுத்தும் விதமாக பாடல் அமைந்துள்ளது.
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ள பாடலை பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு படத்திலிருந்து இப்பாடல் நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தத போதிலும் youtube இல் இப்ப பாடல் பரவி வருவதை தடுக்க வேண்டும் எனவும் அதனை டவுன்லோட் செய்யாதவாறு நீக்கம் செய்ய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.