

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் குராயூர் அருகே அரசு மதுபானக் கடை திறக்க அரசு அனுமதி வழங்கியதால், கிராம அவதி மக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
திருமங்கலம் வட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், குராயூரிலிருந்து சென்னம்பட்டி செல்லும் சாலையில், அரசு சார்பில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடைய உடனே மூடக்கோரியும், இதனால், பள்ளி மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படும் என்றும், மேலும் கிராமங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் இதனால், மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசு டாஸ்மார்க் கடையை மூடக்கோரி கிராம மக்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர். இக்கடையை அரசு மூடா விட்டால், கிராம் மக்கள் தொடர் போராட்டம் ஈடுபட உள்ளனராம். மேலும், இக்கடையை திறக்க அப்பகுதி திமுக பிரமுகர் ஆதரவும் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

