தமிழகத்தில் நீண்ட கடற்கரையையும் 47_மீனவ கிராமங்களை கொண்ட குமரி மாவட்டம்த்தில். மீன்பிடித் தொழில் ஒரு முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டம்.

குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல் ஆகிய இரண்டு மீன்பிடி துறைமுகங்களுடன், ஜேப்பியார் தனியார் துறைமுகங்கள் கொண்ட மாவட்டத்தில் 3000_க்கும் அதிகமான வசைப்படகுகளை கொண்ட மாவட்டத்தில் மீன் பிடித்தொழிலை நம்பி 50_ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும்,50_ஆயிரம் மறைமுக தொழிலாளர்களும் தினம் வேலைவாய்ப்பை பெற்று வருவதுடன். மீன் ஏற்றுமதியில் அதிகமான அன்னிய செவலாணியை இந்தியாவிற்கு வருவாய் ஈட்டும் தொழிலை சீர் குலைக்கும் வகையில்.
மீன்பிடித் தொழிலுக்கு ஆதாரமான கடல் பரப்பை கூறுபோடும் வகையில். மத்திய பாஜக அரசு கடலில் எண்ணெய்,எரிவாய்வு எடுக்கும் அனுமதிப்பதை கண்டித்தும். இந்த நாசகார திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி.

குமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ குடும்பத்தினர். கிழமணக்குடி கிறிஸ்தவ தேவாலயத்தின் முற்றத்தில். பாஜக அரசின் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் உறுப்பினர் விஜய் வசந்த், குமரி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மையம் இயக்குநர் அருட்பணி டன்ஸ்டன், சாமிதோப்பு அய்யா வழி பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், குறும்பனை பெர்லின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் குமரி மாவட்டத்தின் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கீழமணக்குடி மீனவர்கள் இன்று கடல் தொழிலுக்கு செல்லாது. மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.