• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகம்

BySeenu

Mar 25, 2025

இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகப்படுத்தப்பட்டது. செல்போன் துறையில் முன்னணி நிறுவனமான OPPO அதன் F29 சீரிஸ் Durable Champion-யை அறிமுகம் செய்துள்ளது. இது கேரளாவின் பருவமழை, இராஜஸ்தானின் கொளுத்தும் வெப்பம் முதல் காஷ்மீரின் கடுங்குளிர் வரை இந்தியாவின் மாறுபட்ட, கடுமையான சூழல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் Water Proof தன்மையையும் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும், அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல்கள் Hands-Free Mode உடன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
F29 சீரிஸில், F29 Basic மாடலில் 6500mAh 45W SUPERVOOC சார்ஜிங் பேட்டரியையும், Pro seriesல் 6000mAh 80W SUPERVOOC சார்ஜிங் பேட்டரியையும் கொண்டுள்ளது.

இந்த போன்கள் OPPO E-store, Flipkart, Amazon மற்றும் பிரதான சில்லறை விற்பனை நிலையம் ஆகியவற்றில் மார்ச் 27 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை மாடல்களுக்கு ஏற்ப 27999, 29999, 31999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி OPPO India, எஸ்பிஐ கார்டுகள், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவற்றில் கிரெடிட் கார்டுகளில் கேஷ்பேக்கில் 10% உடனடி கேஷ்பேக்கை வழங்கப்படுவதாகவும்,
6 மாதங்கள் வரை விலையில்லா ஈஎம்ஐ மற்றும் 8 மாதங்கள் வரை நுகர்வோர் கடன்களைப் முன்பணம் செலுத்தாத திட்டங்களைப் பெறலாம் எனவும், வாடிக்கையாளர் 10% வரை பரிமாற்ற போனஸையும் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.