வேளாங்கண்ணியில் தவெக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடும் வகையில் உடலுக்கு குளிர்ச்சியான இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன்பு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் சுகுமார் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர், இளநீர், கிர்ணி, தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி வழக்கறிஞர் கிங்ஸ்லி ஜெரால்டு வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் மை.லூயிஸ் ஆரோக்கியராஜ், பேரூர் கழக பொருளாளர் ம.மைக்கேல் சேசுராஜ் , கழக நிர்வாகி அடைக்கலம், வேளாங்கண்ணி மகளிர் அணி செயலாளர் ஜோஸ்பின் மேரி உள்ளிட்ட தவெக கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.