கன்னியாகுமரி பேரூராட்சி பெரிய நாயகித்தெரு பகுதியில் தூண்டில் வளைவுப்பாலம் நீட்டிப்பு மற்றும் மீனவர் ஓய்வுக்கூடம் திறப்பு விழா இன்று (டிசம்பர்_8)ஆம்
நாள் நடைபெற்றது.

கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரையில் ரூ. 26 கோடி செலவில் தூண்டில் வளைவுப்பாலம் நீட்டிப்பு மற்றும் மீனவர் ஓய்வுக்கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த காணொளி காட்சி மூலம் இதனை திறந்து வைத்தார்.


இதையொட்டி கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் வி.தீபா, கன்னியாகுமரி பங்குத்தந்தை உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், துணை செயலர் டெமி, மீன்வளத்துறை உதவிப் பொறியாளர் ஹரி பிரசாத், இளநிலைப் பொறியாளர் விவேக் ஆனந்த், மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் நிசார், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் சின்னமுட்டம் ஷ்யாம், திமுக நிர்வாகி அமல்டன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.




