புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகியவை இணைந்து சுமார் 5.50 லட்சம் மதிப்பீட்டில் பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.

இந்த சுகாதார வளாகத்தை ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி ஆளுநர் ஜே.கார்த்திக் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி நிர்வாகிகள் குமரப்பன்,கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி நிர்வாகிகள் ஆரோக்கியசாமி,கருணாகரன் கதிரேசன், அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்வில் தற்போதைய ரோட்டரி சங்க தலைவர் ஆறு.சுதாகரன் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் முருகேசன்,ராமச்சந்திரன், தக்ஷிணாமூர்த்தி முத்துக்குமார், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் நன்கொடை வழங்கிய முத்தையா ஜுவல்லரி குடும்பத்தினருக்கு மற்றும் துர்கா மருத்துவமனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா நன்றி உரையாற்றினார்.








