• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..,

ByRadhakrishnan Thangaraj

Dec 30, 2025

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ஸ்ரீவில்லிபுத்தூர் டிசம்பர் 31 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலமாகும். இங்கு துளசி செடிக்கு கீழ் தோன்றிய ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்து அரங்கன் மீது பக்தி கொண்டு மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல் பாடி கைத்தலம் பற்றிய பெருமை உடையது.

இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அந்த வகையில் மார்கழி நீராட்ட உற்சவம் கடந்த 20ஆம் தேதி பச்சை பரத்தலுடன் தொடங்கி புகழ்பெற்று உற்சவம் ஆரம்பித்தது. பத்து நாட்கள் காலை இரவு வேளைகளில் சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று 30ந்தேதி அதிகாலை5:30மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் சொர்க்கவாசல் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

இதனை முன்னிட்டு அதிகாலை ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டது அப்பொழுது சொர்க்கவாசலுக்கு வெளியே வேதாந்த தேசிகர் ராமானுஜர் பெரியாழ்வார் ஆகியோர் ஒன்று சேர நின்று மங்களாசாசனம் செய்தார் அப்பொழுது சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு அதன் வழியே மேளதாளம் முழங்க பெரிய பெருமாள் ஆண்டாள் ரங்க மன்னார் ஆகியோர் வர சரியாக காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்பொழுது திரண்டு இருந்த பக்தர்கள் கோபாலா கோவிந்தா என விண் அதிர பக்தி கோசமிட்டனர்.

தொடர்ந்து ஆண்டாள் ரங்க மன்னர் ராபத்து மண்டபத்திற்கு சென்று அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜுயர் சுவாமிகள் சட்டமன்ற உறுப்பினர் இ எம் மான்ராஜ் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி.கண்ணன் கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் நகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் பக்தர்கள் சுவாமிகளை சிரமம் இன்றி தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. சொர்க்கவாசல் திறப்பு தொடர்ந்து இராப்பத்து என்னும் திருவாய்மொழித் திருநாள் நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகின்றன. இதனைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவமும் நடைபெறுகிறது. இதில் திரு ஏகாந்த திருமஞ்சனம் அரையர் வியாக்கியானம் கைத்தல சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செ. மாரியப்பன் விருதுநகர் உதவி ஆணையர் மு. நாகராஜன் கோயில் செயல் அலுவலர் செள. சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் கோயில் அலுவலர் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர். நேற்று ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு ஏராளமான உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்களும் சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப சாமி பக்தர்களும் இடைவிடாமல் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.