• Sat. May 11th, 2024

கோவை தெற்கு மாவட்டத்தில் தளபதி விஜய் நூலகம் திறப்பு.!

BySeenu

Nov 24, 2023

கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக, இலவச இணையதள வசதியுடன் தளபதி விஜய் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் துவக்கியிருக்கும் இந்த நூலகம், இலவச இணையதள வசதியுடன் மாணவ,மாணவிகள்,இளைஞர்கள் பயன் பெறும் விதமான நான்காயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரைப்படி, மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நூலகம் துவங்கி வருகின்றனர். மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக துவங்கப்பட்டு வரும் இந்த தளபதி விஜய் நூலகத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் தலைவர் கோவை விக்கி தலைமையில் கோவை கிணத்துகடவு தொகுதி, எட்டிமடை பகுதியில் விஜய் நூலகம் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தலைமை செயலாளர் அருண்பாண்டியன் கோவை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கிரிஷ்,கோவை தெற்கு மாவட்ட உமாபதி, எட்டிமடை பாலு,கோவை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் பாலாஜி,கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் பால்ராஜ், ரோஹித், செந்தில், அருண்குமார்,வினோத்குமார்,கௌதம்,கோவை தெற்கு மாவட்ட தலைமை தொண்டரணி நிர்வாகிகள்,ரஞ்சித்,பிரவீன், ஆனந்த், பவின், லோகு, சரவணன்,பகவதி பாலு, வருண்குமார், கோவை தெற்கு மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சபீர்,யூனுஸ், முத்து,செந்தில்.நச்சிபாலயம் சதீஷ்,பொள்ளாச்சி நகர மகளிரணி லதா,அனு. மதுக்கரை ஒன்றிய மகளிரணி மஹாலக்ஷ்மி, மகாலட்சுமி, கிருத்திகா, பொள்ளாச்சி தெற்கு நகரம் தர்மராஜ் , டேனியல்,பொள்ளாச்சி வடக்கு நகர தொண்டரணி வெங்கடேஷ், மதுக்கரை நகர தலைமை வினோத்,மதுக்கரை இளைஞரணி தலைமை டிமிட்ரோ, மதுக்கரை நகர தொண்டரணி சிலம்பரசன் ,மதுக்கரை ஒன்றிய தலைமை ரமேஷ், மதுக்கரை ஒன்றிய மாணவரணி விஜய்,கிணத்துகடவுகிழக்கு இளைஞரணி செந்தில், குறிச்சி மாணவரணி அனீஷ், பிரபு ,குறிச்சி நகர தலைமை அமான்,குறிச்சி நகர தொண்டரணி சமீர், மாசி, பயிலகம் ஆசிரியை உமாமகேஸ்வரி, கவிதா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *