• Fri. Jun 2nd, 2023

மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடை திறப்பு..!

Byவிஷா

Nov 14, 2021

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு மேல்சாந்திகள் நாளையே பதவியேற்கவுள்ளனர்.

மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வரவுள்ள நிலையில், இணைய வழி அனுமதி மூலம் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *