கொட்டாரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை விஜய் வசந்த் எம்.பி., இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமுதாய நலக்கூட கட்டடத்தை விஜய் வசந்த் எம்.பி., திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநில காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் டி.தாமஸ், ராமச்சந்திரன், கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் எஸ்.வைகுண்ட பெருமாள், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வினோத், தாமரை பிரதாப், மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் டாக்டர் சிவகுமார், மாவட்ட செயலாளர் தெய்வப்பிரியம், மாவட்ட அமைப்பு செயலாளர் இசக்கி பாண்டியன், கொட்டாரம் பேரூர் செயல் தலைவர் ஜார்ஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சரோஜா, இந்திரா, வனிதா, கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
