கோணம் நாகர்கோவில் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் திறன் மேம்பாட்டு கழக சார்பாக செவிலியர் பயிற்சி முடிந்தவர்கள் ஜெர்மன் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பணிகளுக்கு செல்வோர்களுக்கான ஜெர்மன் மொழியை கற்று கொள்ளும் பயிற்சி மைய திறப்பு விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்களுடன் கலந்து கொண்டார்.

மேலும் நூலகம் மற்றும் மையத்தை பார்வையிட்டு அதன் நிறை குறைகளை அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், பயிற்சி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









