• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் டிரேடிங் மோசடி : எச்சரிக்கும் காவல்துறை

Byவிஷா

Feb 8, 2024

ஆன்லைன் டிரேடிங் மோசடி என்ற பெயரில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மர்ம நபர்கள் மோசடி செய்வதாக தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மர்ம நபர்கள் மோசடி செய்வதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மோசடியாளர்கள் இலவசமாக குறிப்புகளை வழங்கிய வர்த்தகம் செய்ய தூண்டுவதுடன் லாபம் ஐம்பது லட்சத்தை அடைந்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று ஏமாற்றுவார்கள் என எச்சரித்துள்ள காவல் துறை, அவ்வாறு பணத்தை பறி கொடுத்தவர்கள் 1930 என்ற உதவி எண்களை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.