• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்டர் மீடியேட்டர் மீது மோதி ஒருவர் பலி..,

ByPrabhu Sekar

Jul 29, 2025

தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி வந்த இரண்டு நபர்கள் அதிவேகமாக வந்துள்ளனர்.

அப்பொழுது சென்னை ஆசர்கானா அருகே வளைவில் திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் மோதியது.

இரண்டு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்ததில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் வாகனம் ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் மற்றொரு நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்த்து விட்டு பைக்கில் வேகமாக வந்த பொழுது இதே இடத்தில் சென்டர் மீடியேட்டரில் மோதி உயிரிழந்த நிலையில்,

போலீசார் வேகத்தை குறைப்பதற்காக பேரிகார்டுகள் அந்த இடத்தில் வைத்தனர். இதனால் விபத்தை ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

தற்பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.