• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நீட்டுக்கு எதிராக குமரி மேற்கு மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து.., களத்தில் இறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்..!

குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது மக்களிடம் இருந்து நீட்டுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்தை பெற்று இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பும் முயற்சியில், தி மு க வின் ஐ டி விங் எடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று (நவம்பர்-16)ம் தேதி, தக்கலை பேருந்து நிலையத்தில் பயணிகளிடம், மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சரும், குமரி கிழக்கு தி மு க., மாவட்ட செயலாளருமான அமைச்சர் மனோ தங்கராஜ் நேரடியாக களத்தில் இருந்த பொது மக்களிடம் ஒன்றிய அரசு நம் பிள்ளைகளின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வை புகுத்தி, நம் பிள்ளைகளின் மருத்துவ கனவுக்கு எதிராக செயல் படுவதையும், தலைவர் கலைஞர் இருந்த வரை நீட்டை தமிழகத்தில் புக முடியாது இருந்த நிலையை மீண்டும் தமிழகத்தில் சட்டமாக்கி. நம் பிள்ளைகளின் மருத்துவ கனவை மீண்டும் தமிழகத்தில் நிலை நாட்ட உறுதி எடுத்துக்கொள்வோம் என்ற அமைச்சர் செய்தியாளர்களை தக்கலை பேருந்து நிலையத்தில் சந்தித்தார்.