• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி..,

BySeenu

Dec 14, 2025

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பான
பிளாக் பிரின்டிங் எனப்படும் அச்சிடுதல், டோர் மேட் வீவிங் எனப்படும் கால்மிதி நெசவு செய்தல், ஆகியவற்றை, கண்டு அதற்கான குறிப்புகளை எடுத்து கொண்டனர். பள்ளியில் இருந்து சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் கைத்தறி நெசவாளர்களின் பணிகள் நெய்தலில், உள்ள பல்வேறு நுணுக்கமான நுட்பங்களை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கைத்தறி நெசவுதுறையில் தற்பொழுது வந்துள்ள பல்வேறு கட்ட புதிய புதிய யுக்திகள், நுணுக்கங்கள் அனைத்தும் இணைப்பது, துணிகளுக்கு சாயமிடுதல், வகைகள் உலர்படுத்தும் பயிற்சிகள், அவற்றை விற்பனைக்கு கொண்டு செல்லும் முறைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு முழுமையான பயிற்சிகள் வழங்க பட்டது. இதனால் இனி வரும் தலைமுறைகள், கைத்தறி நெசவு முறைகளில், வெளிபாட்டின் துணிகளை அதிக அளவில் பயண்படுத்த ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவன மையத்தின் நிறுவனர் கைத்தறி முருகேசன், பழனி வேல் அறிவுரையாளர் ராஜாராம், சில்க் வில்லேஜ் பேராசிரியை ஜோதிமணி, கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.