• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு படமாத்தூரில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய நிகழ்ச்சி

ByG.Suresh

Sep 14, 2024

தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு படமாத்தூரில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கேப்டன் அவர்களின் ஆசியுடன் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திருவேங்கடம் ஆலோசனையின் பேரில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அருகே படமாத்தூரில் கிராமத்தில் கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் வன்னிமுத்து ஏற்பாட்டில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானமுத்து தேமுதிக கொடியேற்றி துவங்கி வைத்தது. பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாத்தூர் சண்முகம், k.அசல், வீசி.கண்ணன், சிவகங்கை நகரச் செயலாளர் தர்மராஜன், அவைத்தலைவர் மாரி, மற்றும் கிளைச் செயலாளர் கருப்பு ராஜா, வடிவேல், கருப்புசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.