ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தலைசிறந்த தத்துவஞானியும், இந்தியாவின் முதல் குடியரசு தலைவருமான, ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 05ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி மத்திய மற்றும் மாநில அரசு, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் இந்நன்னாளில், தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டி, கவுரவித்து வருகிறது. இத்தகைய ஆசிரியர்களை போற்றி பெருமைப்படுத்தும் விதமாக,
சிவகங்கை சாம்பவிகா மேல் நிலைபள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஒன்று திரண்டு பள்ளியின் தாளாளர் சேகர்-க்கு பிரம்மாண்டமான மாலை அணிவித்தும் , மாணவிகள் கிப்ட் கொடுத்து ஆசிரிய தின வாழ்த்துகளை கூறி, நல்லாசி பெற்றனர். அதன் பின் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போற்றி, பள்ளியின் தாளாளர் சேகர் கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் இருபால் ஆசிரிய பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தாளாளர் சேகர் மாணவ, மாணவிகளிடம் பேசுகையில்..,
1962ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் நாளை இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும், இரண்டாவது பெற்றோராக விளங்கி அவர்களை பேணி காத்து வாழ்வில் உயர அவர்களுக்கு நல்வழி காட்டுகின்றனர். மேலும் வாழ்க்கை என்ற பாடத்தை கற்றுத் தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாகுவதே ஆசிரியர்களின் அயராத பணியாகும் என தெரிவித்தார்.






