• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் முன்னிட்டு, இயல்பாரதி விருது வழங்கும் நிகழ்வு..,

ByG.Suresh

Dec 17, 2023

பாரதி இசை கல்வி கழகம் சார்பில், மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் அவை முன்னிட்டு, இயல்பாரதி விருது வழங்கும் நிகழ்வு தொண்டி சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாநில அளவில் பாரதி இசை கல்வி கழகம் சார்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இந்த பேச்சுப் போட்டியில் சிவகங்கை மதுரை, சென்னை, தஞ்சாவூர், ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 748 பேர் கலந்து கொண்டனர். இதில் 141 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இன்று அவர்களுக்கு சிவகங்கை அருகே தொண்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் மஹாலில் இயல் பாரதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன் சிவகங்கை இளைய மன்னர் மகேஷ் துறை முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் ராமநாதபுர இளைய மன்னர் பாபு சண்முகநாத சேதுபதி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த்
பாரதி இசைகல்வி கழக யுவராஜ் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.