• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ByI.Sekar

Apr 28, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுகிறது.

ஆண்டிபட்டி நகர் வழியாக செல்லும் கூலித்தொழிலாளர்களும், இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் மிகவும் வெயிலால் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களின் உடல் நலனுக்காக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி திமுக சார்பில் ஆண்டிபட்டி வைகை அணை சாலைப்பிரிவில் நீர் மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.

ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ,ஆண்டிபட்டி சேர்மன் சந்திரகலா, மாநில நெசவாளர் அணி ஆ.ராமசாமி, நகர செயலாளர் பூஞ்சோலை சரவணன், நிர்வாகிகள் சேட் பரமேஸ்வரன் ,சேகர், அய்யணன், பெரியசாமி ,சிவா, பொன்னுத்துரை,ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற நூற்றுக் கணக்கானோர் நீர் மோரை மகிழ்ச்சியுடன் வாங்கி பருகிச் சென்றனர்.