• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடிகர் கே. பாக்கியராஜுக்கு விருது

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் என்ற சர்வதேச சட்ட நிறுவனம்சார்பில் நடிகர் கே.பாக்கியராஜூக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் என்ற சர்வதேச சட்ட நிறுவனம் மற்றும் உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் அறிக்கை என்ற சட்ட இதழ்களை வெளியீடு செய்த இரு தன்னார்வ அமைப்புகளும் தங்களின் 15-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடினர்.
இதை முன்னிட்டு மனித உரிமைகள் தினமான நேற்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான டாக்டர்.எஸ்கே சாமி தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோ.இரவிகுமார் முன்னிலையில், முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, திரைப்பட இயக்குனர் கே.பாக்கியராஜ் உள்ளிட்ட உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில் விருதுக்கு தேர்வானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


இதில் இந்திய இராணுவ வீரர்கள், தமிழ்நாடு காவல்துறையினர், தமிழ்நாடு மாநில தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மூன்று இசை வாத்தியக் குழுக்களும் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் 15 வது ஆண்டுவிழா மற்றும் மனித உரிமைகள் தின கொடி வகுப்பு பேரணியில் கலந்து கொண்டனர்.
மேளதாளத்துடன் துவங்கிய பேரணி விவேகானந்தர் அரங்கம் சென்றடைந்தது. அங்கு மனித உரிமைகளை காப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, மனித உரிமைகள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
மனித உரிமைகளை காக்க போராடியவர்களுக்கும், தற்போது இந்திய தேசத்தை பாதுகாத்து வரும் முப்படை வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவராலும் சக மனிதனின் உரிமைகளை காக்க நினைக்கும் அவரவர் ஒப்பற்ற தியாகம் கலந்த சேவைகளை சமூகத்தில் மென்மேலும் வளர்த்து பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.