கடந்த 11 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

உதாரணத்திற்கு ஒரு கட்டுமான பணியில் ஈடுப்படும் தொழிலாளர்கள் ஒரு நாள் முன்னதாக வரும் தொழிலாளருக்கு ஒரு ஊதியமும் கூடுதலாக அடுத்த நாள் பணிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களுருக்கு ஒரு ஊதியமும் வழங்கினால் எப்படி ஏற்றுக்குக்கொள்வார்கள். அந்த நிலையில் தான் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் தேவை என போராடி வருகிறார்கள். இவர்களின் நியாமான போட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கைது செய்த பொது செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட ஆசிரியர்களை விடுதலை செய்து பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஊதிய முரண்பாட்டை சரி செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய பிரச்சனையை சரி செய்ய எந்த அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதற்கு நிதித்துறை உயர் அலுவலர்கள் தான் பெரும் தடையாக இருக்கிறார்கள் ஆதலால் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நேரடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்து சென்று ஊதிய முரண்பாட்டை சரி செயது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.




